நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம். பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். ஆனால் தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? என மரிய வில்சனை சீமான் விளாசியுள்ளார்.
தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதை சுட்டிக்காட்டிய சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்த விதம் ஆணவத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தின்போது பேசிய மதிமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மரிய வில்சனின் தமிழை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளித்த மரிய வில்சன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F14%2Fe-2026-08-14-10-31-10.jpg&w=3840&q=75)
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F13%2F270-2026-08-13-21-22-22.jpg&w=3840&q=75)
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F12%2Fcm-vijay-nainar-2026-08-12-07-33-02.jpg&w=3840&q=75)
