கோவை வடிவேலம்பாளையத்தில் வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று உலகளவில் புகழ்பெற்ற 90 வயதான கமலாத்தா பாட்டி, தனது இட்லி கடைக்காக வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டதால், மீண்டும் அதைத் தொடர்ந்து வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஏழை எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காகப் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் இவருக்கு, தனியார் நிறுவனம் சார்பில் இலவசமாக எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அந்த விநியோகம் எந்தவித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த பாட்டி, தனது மக்கள் சேவை தடைபடாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நேரில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.
90 வயதிலும் தொடரும் மக்கள் சேவை… கேஸ் சிலிண்டருக்காக ஆட்சியரிடம் மனு!
K
Keerthana
நிருபர் ·
0
பகிர்
Advertisement · 300 × 250
கருத்துகள்
ஏற்றுகிறது…
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர்புத்தேரி ஆனைபொத்தை கிராமத்தில் படிப்பகம் மற்றும் இரவு பாடசாலை தொடக்கம்!
23 நாட்கள் முன்
உள்ளூர்சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவக் கட்டமைப்பு: ‘வி த சேஞ்ச்’ இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
23 நாட்கள் முன்
உள்ளூர்மாற்றத்தை உருவாக்கும் மனிதநேய சேவை..!
42 நாட்கள் முன்

சமணர்கால காவல் தெய்வமான தர்மதேவி சிலை கண்டுபிடிப்பு!..
42 நாட்கள் முன்
உள்ளூர்பத்திரிகையாளர்களைப் பதறவைக்கும் ‘RNI’ அலுவலகம்!
45 நாட்கள் முன்
உள்ளூர்கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுப் பணிக்காக “தவப்புதல்வி” அமைப்புக்கு சிறப்பு விருது
46 நாட்கள் முன்
