நவ. 1
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் ·

0

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது   

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணைவதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இதையும் படிக்க |பிரபல இசையமைப்பாளர் இசையில் பாடகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்

இந்த நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் இன்று (பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்போ அல்லது முதல் பாடல் குறித்த அறிவிப்போ இருக்கலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் குறித்த அறிவிப்பு விடியோவில் நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்டுத்த தடை*

Composer Ilayaraja banned from using songs *

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் ' வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

'Beast' movie first single 'Arabic punch' song released; Has received 1 million views in 40 minutes.

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

விஜய் பாடலுக்கு நடனமாடிய சமந்தா... வைரலாகும் வீடியோ

Samantha who danced to Vijay song ... viral video

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

காதலர் தினம்

Valentine's Day

1720 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

பூனை குறுக்கே போனால்...கெட்ட சகுனமா?_

If the cat goes across ... a bad omen? _

1727 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.*

A true story in the life of director R Sundararajan.

1727 நாட்கள் முன்